Sunday, 1 May 2016

நமது கோட்ட மாநாடு

தேனி கோட்ட தேசிய சங்க மாநாடு 01.05.2016 அன்று போடிநாயக்கனுர் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற்றது.

நமது கோட்ட தலைவர் திரு.வேணுகோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னாள்  செயலாளர் திரு.ராஜேந்திரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
திரு விவேகாநந்தன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நமது கோட்டசெயலாளர் திரு இளங்கோவன் அவர்கள் ஈராண்டு அறிக்கை வாசித்தார் 
திருமதி சித்ரா அவர்கள் வரவு செலவு கணக்கு வாசித்தளிக்க விழா இனிதே தொடங்கியது.
கோட்ட மாநாட்டின் சிறப்பு நிகழ்ச்சியாக கோட்ட சங்கத்திற்கென பிரத்யோக வலையதளம் WWW.FNPOTHENI.BLOGSPOT.IN - மூத்த உறுப்பினர் திரு வேணுகோபாலகிருஷ்ணன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது . இவற்றை  நடத்திட பெண்தோழியர்கள் தன்னார்வலர்களாக பொறுப்பேற்றுகொண்டனர். இதை வளையதளத்தை நமது வேண்டுகோளுக்கினங்க திருநெல்வேலி கோட்ட தலைவர் திரு.S.A.இராம சுப்பிரமணியன் அவர்கள் ஒருசில நிமிடங்களில் உருவாக்கி தந்து உதவினார் அவருக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
 

மாநாட்டில் அண்டைகோட்டங்களில் இருந்து  
திருநெல்வேலி கோட்ட தலைவர் திரு.S.A.இராம சுப்பிரமணியன்  
திருநெல்வேலி கோட்ட பொருளாளர்  திரு இரமேஷ் அவர்களும்  கலந்து கொண்டனர்.
மாநில சங்க கன்வீனர் திரு.திருஞானசம்பந்தன் சார்பாக தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு N.J. உதயகுமாரன் அவர்கள் கலந்து கொண்டார். 
மாநாட்டின் இறுதியாக திருமதி சித்ரா அவர்கள் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.

மூன்றாம் பிரிவின் புதிய நிர்வாகிகளாக  
திருமதி சித்ரா- கோட்ட தலைவர் 
திரு இளங்கோவன் கோட்ட செயலாளர் 
திருமதி.V. சூரியா கோட்ட பொருளாளர் ஆகியோரும் 
தபால்காரர் மற்றும் MTS க்கு 
 திரு. மாரிமுத்து - கோட்ட தலைவர் 
திரு புகழேந்தி - கோட்ட செயலாளர் 
திருமதி.ராஜேஸ்வரி - கோட்ட பொருளாளர் ஆக தேர்தெடுக்க பட்டனர்.
அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment